August 5, 2020

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரில், கோழைகளின் கொழுப்பேறிய செயல், திராவிட இயக்க கலங்கரை விளக்கு தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தபட்டது…

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலைய பகுதியில், 2010 ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி, உலக தமிழ் செம்மொழி மாநாடு விளக்க பொதுகூட்டம், மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் சுந்தரம், மாவட்ட செயலாளர் கும்முடிபூண்டி கி.வேணு, கே.பி.பி.சாமி, ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலையில், திமுக வின் பொது செயலாளர் க.அன்பழகன் அவர்கள் திராவிட இயக்க கலங்கரை விளக்கு, அய்யா, பெரியார் ஈ.வே.ரா. அவர்களின் வெண்கல திருவுருவ சிலையை, திறந்து வைத்திருந்தார். அந்த சிலையை இன்று, ஏதோ கையால் ஆகாத சில சமூகவிரோதிகள், பெரியாரின் சிலையில், முகத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த தகவல் அறிந்து மீஞ்சூர் பேருந்து நிலையம் பகுதியில், உடனடியாக திமுகவினர் பெருமளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல்.இன் – 8939476777