August 5, 2020

பெரியபாளையம் அருகே, வடமதுரை கிராமத்தில், தனியார் அறக்கட்டளை சார்பில், நிவாரண பொருட்களை ஊராட்சி மன்றத்தலைவர் வழங்கினார்…

தற்போது நாடு முழுவதும் வேகமாக கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக, மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் அன்றாட தேவைகளுக்கு மிகவும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், எல்லாபுரம் ஒன்றியம்
வடமதுரை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர் உள்ளிட்டவர்கள், கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் பணியாற்றி வந்தனர் இவர்களுக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சாய் தர்ஷன் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் தலைவர் சுவாமினி குழுமாயி சாந்த்அம்மாள் ஏற்பாட்டில், 50 குடும்பங்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில், தலா ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 5 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வடமதுரை ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி கோதண்டன் கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், ஊராட்சி செயலர் கல்பனா விஜயகுமார் வார்டு உறுப்பினர் வைஷாலி பாலாஜி, ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் அறக்கட்டளையின் செயலாளர் கண்ணன் திவ்யா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிபூண்டி செய்தியாளர் சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777