Wed. Oct 28th, 2020

புழல், மனித நேயம் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…

1 min read
புழல் மனித நேயம் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சூரப்பட்டு அக்வா கிரீனில் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் டி.ராஜபாண்டியன் தலைமையேற்று புதிய நிர்வாகிகளான தலைவர் ஆர்.ராஜா யாதவ், செயலாளர் ஏ.காளிராஜன், பொருளாளர் பி.பாஸ்கர் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
முதல் துணை ஆளுநர் ஆர்.ஸ்ரீதரன், இரண்டாம் துணை ஆளுநர் பி.வி. ரவீந்திரன், முன்னாள் ஆளுநர் டி.துளசிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அமைச்சரவை செயலாளர் பி.மணிசேகர், அமைச்சரவை பொருளாளர் கே.சீனிவாசன், துணைப் பொருளாளர் சி.டேவிட் ராஜ், ஆளுநர் செயலர் டி.ரஞ்சித் குமார், மண்டலத் தலைவர் ஜி.வடிவேலன், வட்டாரத் தலைவர் சி.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் டி.மணிகண்டன், ஜெ.ரவி, வி.சங்கர், ஜி.முரளி, பாபு முனியாண்டி, டி.ஜெய்குமார், எம்.பிரபாகர், ஜி.பாலாஜி, கே.எம். பிரகாஷ், எம்.கே. சௌக்கத் அலீ, என்.ஹரி, ஏ.ஜெகநாதன், ஆர்,கோபகுமார், சிட்டி பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை முன்னாள் நிர்வாகிகள் டி.மணிகண்டன், வி.எஸ்.பத்மநாபன், டி.ஜெய்குமார் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *