August 5, 2020

ஆவடியில் குடியிருப்போர் சங்கத்தை துவக்கியும், திருவேற்காட்டில் நிவாரணமும் வழங்கினார், அமைச்சர் பாண்டியராஜன்…

திருவேற்காடு நகராட்சி பெருமாள்நகரம் 6வது வார்டில் லாட்ஜ் சி ஏ ராமாகிருஷ்ணன் (ம) புருடென்சியா சாரிடிபல் டிரஸ்ட் சார்பாக, இன்று 500 நபர்களுக்கு
கோதுமை பாக்கெட் மற்றும் முக கவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை
அமைச்சர் மாஃபா க .பாண்டியராஜன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஆவடி மாநகராட்சி
25வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின்
திறப்பு விழா நடைபெற்றது அதில் கலந்துக்கொண்டு,அமைச்சர்மாஃபா க .பாண்டியராஜன் அவர்கள்.அப்பகுதி முன்னேற்றத்திற்காக அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்தார்.பின்னர் நியமிக்கப்பட்டபுதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். மேலும்நிர்வாகிகளின்பெயர் பலகையை திறந்து வைத்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது
ஆவடி மாநகரக் கழகச் செயலாளர்ஆர் சி தீனதயாளன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நிழல்.இன் – 8939476777