பொன்னேரியில் பிரம்மாண்ட நீர்த்தேக்கம் அமைப்பதற்கு பணியை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்..
1 min read

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வழியில், செயல்படும் தமிழக அரசு நீர்வள ஆதார துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 21 திட்டப் பணிகளுக்கு, முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம்
அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்காக காட்டூர் பகுதியில் நடந்த விழாவில், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ, சிறுனியம் பலராமன் அவர்கள், முதல்வருடன் காணொளி காட்சி மூலம் இணைந்து திட்ட பணிகளை துவக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில், ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமாரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராக்கேஷ், ஒன்றிய செயலாளர் மோகன் வடிவேல், கோளூர் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், தத்தை அருள், பொன்னுதுரை, பொன்னேரி பா. சங்கர், காட்டூர் ஆனந்தன், வெற்றி, அமிர்தலிங்கம், பொன்னேரி சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777