திருவள்ளூர் மாவட்டத்தில் கொரானோ நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதையடுத்து, மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நடமாடும் கொரானோ பரிசோதனை முகாம் நடத்த, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், புழல் ஒன்றியம் தீர்த்தகரையம்பட்டு ஊராட்சியில் அடங்கிய மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டி, ஊராட்சிமன்ற அலுவலகத்தில், கொரானோ நோய்தொற்று கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை தீர்த்தகரையம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அருண்குமார் மற்றும் சமூக சேவகர் டேவிட்சன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.