Fri. Sep 25th, 2020

பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

1 min read
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18வயது நிரம்பிய அனைத்து மீனவர்களையும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ள வேண்டும், எனவும் மீன்வளத்துறை மற்றும் நலவாரியத்தில் வழங்கப்படும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் நிலுவையில் உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும், மீனவர்களுக்கு மானிய விலையில் தினந்தோறும் டீசல் வழங்கி வந்த நிலையில் தற்போது டீசலை வெளியில் வாங்கி கொள்ளுமாறும் பின்னர் மானியதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற நடைமுறையால், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், பழைய நடைமுறைப்படியே டீசல் வழங்க வேண்டும். என்றும் கோரிக்கை வைத்தனர். அதே போல், மீன்வளத்துறையை
” மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ” என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *