பெரியபாளையம் அருகே, வெங்கல் பகுதியில் தொடர் மணல் கொள்ளை…
1 min read

அத்திங்கி காவனூர், கொள்ளுமேடு பகுதியில், அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சில மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் ஜேசிபி எந்திரத்தை வைத்து லாரிகள் மூலம் மணல் எடுத்து விற்பனை செய்கின்றனர். இது குறித்து பல முறையும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என்றும், அவர்கள் அலட்சியத்தால், இப்போது தினம் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடக்கிறது. அந்த மணல் கொள்ளையை, சம்பந்தப்பட்ட வெங்கல் காவல் துறையினர், நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777
