திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரை, யாரும் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும், முடியாத நிலை நிலவுவது வருத்தமளிக்கிறது…
1 min read

சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ், 10 கோடி ரூபாய் செலவில், இரண்டரை கோடி பனைமர விதைகள் தமிழகம் முழுவதும் விதைக்கபடும் என, அறிவித்தார். அதனடிப்படையில், நமது திருவள்ளூர் மாவட்டத்தில் எப்பொழுது பனைமர விதை விதைக்கப்பட உள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை.

இருபத்தைந்தாயிரம் பனை விதைகள் விதைக்க முடிவு செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது அடுத்து வரக்கூடிய 2020ம் ஆண்டு தமிழக அரசு குடிமராமத்து பணியை மேற்கொள்ளும் அப்போது அப்பணிகள் உடன் சேர்ந்து இறுதியில் குடிமராமத்து செய்த அந்த ஏரிகள் மற்றும் குளங்களின் கரைகளில் 25 ஆயிரம் பனை மரங்கள் நடுவது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

” பனை பட்டு போனால் ஊர் பட்டு போகும் “
என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777
