November 27, 2020

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், திமுக சார்பில், செயற்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது…

1 min read

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக கழகம் சார்பில், திமுக செயல்வீரர்கள் செயற்குழு கூட்டம் வல்லூரி உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் வருகின்ற ஏழாம் தேதி திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை எவ்வாறு அனுசரிப்பது, சமூக இடைவெளி விட்டு ஒவ்வொரு ஊராட்சிகளிலும் எவ்வாறு நினைவு அஞ்சலி செலுத்துவது, என்பது குறித்து ஒன்றிய கழகச் செயலாளர் ஆலோசனை வழங்கினார்.ஏழாம் தேதி அன்று நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக அனைத்து கிளைக் கழகச் செயலாளர்களுக்கும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின்
திருவுருவப் படம் வழங்கப்பட்டது.
மேலும் திமுகவின் சாதனை விளக்கக் கையேடுகளையும் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் கிளைக் கழகச் செயலாளர் களுக்கு வழங்கினார்.
மேலும் வருகின்ற ஏழாம் தேதி வல்லூர் திமுக அலுவலகத்தில் நடைபெறுகின்ற நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் உள்ள துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் 550 பேருக்கு கருணைத் தொகையாக ரூபாய் 1000 மற்றும் 5 கிலோ அரிசி, காய்கறிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமும்,சலவைத் தொழிலாளர்களுக்கு அயன்பாக்ஸ், கைம்பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு இட்லி குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 120 பேருக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களின் தலைமையில் வழங்கப்பட உள்ளன என்பதையும், ரமேஷ் ராஜ் அறிவித்தார்.இந்த கூட்டத்தில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி,ஒன்றிய அவைத்தலைவர் தனசிங், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன்,பாளையம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் முனுசாமி,சக்திவேல், கஸ்தூரி தசரதன்,மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன்,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் லோகநாதன்,வடசென்னை அனல்மின் நிலைய திட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோரும்,ஊராட்சி கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,கிளை கழக செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வல்லூர் ஒன்றிய கவுன்சிலர் ரவி நன்றி கூறினார்.


செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *