கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்து உள்ளனர். மாதவரம் வி.மூர்த்தி சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சி காந்திநகர் காவல் உதவி மையம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு நல்லூர் ஊராட்சி கழகச் செயலாளர் எஸ்.எம்.ஜி. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் சோழவரம் ஒன்றியச் செயலாளர் பி.கார்மேகம், மாதவரம் பகுதி செயலாளர் வேலாயுதம், ஜி.ராஜேந்திரன், எஸ்.மனோகரன், புழல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சுப்பிரமணி, பி.கே. செல்வம், ஒன்றியக் கவுன்சிலர் கோமதி சீனிவாசன், சி.கிறிஸ்டோபர், பி.கே.பாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்து உள்ளனர். மாதவரம் வி.மூர்த்தி சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி கூட்ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சோழவரம் ஒன்றியச் செயலாளர் பி.கார்மேகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் மாதவரம் பகுதி செயலாளர் வேலாயுதம், ஜி.ராஜேந்திரன், எஸ்.மனோகரன், புழல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சுப்பிரமணி, கே.பார்த்திபன், கே.ஆர். வெங்கடேசன், எஸ்.எம்.ஜி.சீனிவாசன், எம்.மாணிக்கம், பி.கே. செல்வம், முன்னாள் கவுன்சிலர் மஞ்சுளா சந்துரு, எம்.ஆர். தாராசிங், வி.உமாபதி, பிரபுதாஸ், பி.கே.பாலன், சங்கரபாண்டியன், என்.வி. வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய சுயேட்சை கவுன்சிலர் எம்.நாகவேல் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முன்னதாக மாதவரம் வி.மூர்த்தி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். இதில் சோழவரம் ஒன்றிய செயலாளர் பி.கார்மேகம், ஜி.ராஜேந்திரன், எஸ்.மனோகரன், குணசேகரன், ஒன்றியக் கவுன்சிலர் எம்.பாஸ்கரன், முன்னாள் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் எம்.மாரி, புழல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சுப்பிரமணி, பி.கே. செல்வம், பி.கே. பாலன், சோழவரம் ஊராட்சி தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர் நிழல்.இன் 8939476777