புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம், புள்ளிலைன், வடகரை, தீர்த்தம்கிரியம்பட்டு, அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், கிராண்ட்லைன் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், புழல் ஒன்றியக் குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னன், ஒன்றியக் கவுன்சிலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தனது மேம்பாட்டு நிதியிலிருந்து 7 ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை செய்ய உறுதி அளித்தார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் விளாங்காடுபாக்கம் பாரதி சரவணன், புள்ளிலைன் தமிழ்ச்செல்வி ரமேஷ், வடகரை ஜானகிராமன், தீர்த்தம்கிரியம்பட்டு கவிதா டேவிட்சன், அழிஞ்சிவாக்கம் ஆஷா கல்விநாதன், சென்றம்பாக்கம் ராமு ஆகியோர் கலந்து கொண்டு தங்களது ஊராட்சி சார்பாக திட்டப் பணிக்கான மனுக்களை வழங்கினர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777