லெபனானில், நடந்த வெடிவிபத்து சென்னையிலும் நடக்க வாய்ப்பா, மக்கள் அச்சம்…
1 min read

2,750 டன், 6 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டு, துறைமுக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் அந்த ரசாயன பவுடர் இறக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்திலிருந்து, புகை மண்டலமாக நெருப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. இதை பார்த்த அங்கிருந்த சிலர், அந்த சம்பவத்தை புகைப்படமும், வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் எரிந்து கொண்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்து சிதறின. அப்போது அந்த துறைமுகம் பகுதியே பூகம்பம் வந்தது போல் அதிர்ந்து போன நிலை ஏற்ப்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் துறைமுகத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அத்தனை கட்டிடங்களும் சேதமடைந்து உருக்குலைந்து போயின, 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த பயங்கர வெடி விபத்தில் உயிர் இழப்புகள் இன்னும் கணக்கிட முடியாத நிலையில் உள்ளது.


விரைந்து சென்று, சுங்கஇலாகா துறையினரால் பறிமுதல் செய்து அங்கு இருப்பு வைத்துள்ள கன்டெய்னர்களை பார்வையிட்டு, பின்னர் விசாரணை நடத்தினார். அப்போது காவல்துறையினர் மற்றும் சுங்கஇலாகா துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு கரூரில் ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனம் சென்னை துறைமுகத்திலிருந்து கொரியா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 37 கன்டெய்னர்களில் சுமார் 740 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் ரசாயன வெடிமருந்து பவுடரை அனுப்பி வைத்தனர். அதற்க்கு முறையான எந்த ஆவணமும் சரியாக இல்லாததால், நாங்கள் (சுங்கஇலாகா துறையினர்) அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிந்து, அந்த வெடிமருந்து பொருளையும் கைப்பற்றி, மணலி புதுநகர் பகுதியில் உள்ள இந்த சத்துவ கண்டெய்னர் யார்டில் இருப்பு வைத்தோம். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.” என சுங்க இலாகா துறை அதிகாரிகள் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு விடம் தெரிவித்தனர். மேலும், காவல் துறையினர், சுங்க இலாக அதிகாரிகளுடன், தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு அந்த இரசாயன வெடிமருந்து பவுடரை அங்கிருந்து அப்புறபடுத்துவது குறைத்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் லெபனானின் நடந்த வெடி விபத்தை நினைத்து சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777
