கொரோனாவால், உயிர் இழப்பவர்களின் உடல்களை, மனித நேயத்தோடு அடக்கம் செய்து வரும், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற நிர்வாகிகள்…
1 min read


நாங்கள் பதவி ஏற்ற பிறகு கொரோனா சம்பந்தமான பணியில் தொய்வில்லாமல் தமிழக அரசின் உத்தரவையும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரரைவயும், பின்பற்றி கொரோனாவிற்காக நானும், எங்களது வார்டு உறுப்பினர்களும் சிறப்பாக பணியாற்றுவதோடு, கடமை தவறாமல் பணியாற்றி வருகின்றோம்.
நான், மட்டும் இல்லாமல், அனைத்து வார்டு உறுப்பினர்களும் கொரோனா வந்த ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், தைரியம் ஏற்படுத்தியும் ஏழ்மை நிலையில் இருக்கும் வீட்டுக்கு அரிசி, மளிகை சாமான் ,காய்கறிகள் போன்றவை வாங்கி அவர்களிடம் நேரடியாக சென்று கொடுத்து அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து வந்திருக்கின்றோம்.
இது போன்ற இறப்புகள் நிகழும் காலங்களில் உற்றார் உறவினரோ அஞ்சக் கூடிய சூழ்நிலையில், நாங்கள் நேரடியாக இறந்தவர்களின் இல்லத்திற்கே சென்று, இறந்தவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும், கொரோனாவால் இறந்தவர்களை புதைப்பதற்காக அரசு காட்டியிருக்கின்ற வழிமுறையை பின்பற்றி நல்லடக்கம் செய்கின்றோம்.

தமிழகத்திலேயே எந்த ஊராட்சியும் வார்டு உறுப்பினர்களும் செய்யாத ஒரு நல்ல காரியத்தை நாங்கள் செய்திருக்கின்றோம் என்ற பெருமிதம் கொள்கின்றோம். என்றைக்குமே எங்கள் ஊராட்சி ஒரு முன்னோடி ஊராட்சியாக திகழும் என்றார்.
செய்திகள் – நண்பன் அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777