மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பப்பட்டு ஊராட்சியில், கடந்த மாதம் பொது மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் அனுப்பம்பட்டு ஊராட்சியில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் அப்பகுதி மக்கள் பாதிக்கபடாமல் இருக்க மீண்டும், அனுப்பம்பட்டில், கொரோனா தொற்று பரிசோதனை நடத்த வேண்டி, ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு அவர்கள் மாவட்ட ஆட்சியர், மற்றும் மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ், ஆகியோர்களிடம், கோரிக்கை வைத்த தை தொடர்ந்து…அனுப்பம்பட்டு ஊராசியில் மீண்டும் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில், உதண்டிகண்டிகை, அனுப்பம்பட்டு, பெரிய காலனி, சின்ன காலனி, சாணார் பாளையம் உட்டபட அனைத்து பகுதியில் உள்ள மக்களும் வந்து பரிசோதனை செய்து கொள்ள வசதியாக அனுப்பம்பட்டு உயர் நிலைப்பள்ளி, பெரியகாலனி நடுநிலை பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. முகாம், அனுப்பம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமாமகேசுவரன் முன்னிலையில் நடத்தப்பட்டது. மேலும், சமூக ஆர்வலர் சசிபாபு, கூட்டுறவு கடன் சங்க இயக்குனர், இராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.