திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாம்பள்ளம் ஊராட்சியை சேர்ந்த காதர்வேடு கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் அடிக்கடி ஏற்படுவதால் அக்கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளானார்கள். இதற்க்கு முன்னாள், வடமதுரை துணை மின் நிலையத்திலிருந்து வெங்கல் வழியாக காதர்வேடு கிராமத்திற்கு மின்சார சப்ளை நடைபெறுகிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக கோடைகாலங்களில் மின் இணைப்பு பெற்றுள்ள இந்த வீடுகளில் குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை ஆகும். இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.இந்நிலையில்ஊராட்சி மன்ற தலைவராக காதர்வேடு சம்பத் பதவியேற்ற பின்னர் அவர் சம்பந்தப்பட்ட மின்வாரியதுறை அதிகாரிகளை சந்தித்து இக்கிராமத்திற்கு மேலும், ஒரு டிரான்ஸ்பார்மரை அமைத்து தர வேண்டும் எனவும், குறைந்த அழுத்த மின்சார சப்ளை பிரச்சனையை போக்க வேண்டும் எனவும், கோரிக்கை வைத்தார். இந்நிலையில்,ரூ.4 லட்சம் மதிப்பில் இக்கிராமத்திற்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.இதனை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் உதவி செயற்பொறியாளர் குமார், வெங்கல் மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாம்பள்ளம் ஊராட்சிமன்ற தலைவர் காதர்வேடு சம்பத் பூஜைகள் செய்து டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆக்கமுகவர்கள் ஜெயச்சந்திரன்,அரசு, மின்பாதை ஆய்வாளர் கணேசன், கம்பியாளர் சம்பத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.