Mon. Sep 28th, 2020

கும்மிடிப்பூண்டி அருகே, நில பிரச்சினை, காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த மூதாட்டி தீ குளித்து தற்கொலை, உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்…

1 min read
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கம் அடுத்த செதில்பாக்கம் ஊராட்சியில் வசித்து வருபவர் ரோஜா 56. இவரின் குடும்பத்தாருக்கும், இவரின் உறவினர் குமார் என்பவருக்கும், ஏற்கனவே நிலத்தகராறு சம்மந்தமாக பிரட்சனை இருந்து வந்தநிலையில், கடந்த 6 ம் தேதி இரு தரப்பினருக்கும் மீண்டும் நிலபிரட்சனை சம்மந்தமாக வாய் தகராறு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. அந்த மோதலில், ரோஜாவின் மகன், மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி முன்னாள் கவுன்சிலர் குமார், மைக்கேல், ஆகாஷ், தினேஷ், மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், பாதிக்கப்பட்ட ரோஜாவின் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது,
அதனால்,
மனமுடைந்த மூதாட்டி ரோஜா கடந்த 3 நாட்களுக்கு முன்னர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார். உடனடியாக பாதிரிவேடு காவல்துறையினர் ரோஜாவை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா உயிரிழந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த ரோஜாவின் உறவினர்கள் “ரோஜாவின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால், மட்டுமே சடலத்தை வாங்குவோம்.” என கூறி வந்தநிலையில், காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தாமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக கூறி ஆத்திரமடைந்த, உறவினர்கள் இறந்து போன ரோஜாவின் உடலை வாங்காமல் மாதர்பாக்கம் சத்தியவேடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், “உரிய முறையில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்படும்” என காவல்துறையினர் உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *