பொன்னேரி தாலுகா அளவில், கொரோனா தொற்றின் பாதிப்பால், பழங்குடியினர் அனைவரும் வேலைகள் இன்றி தங்கள் வாழ்வாதத்தை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், விடுதலை சமூகநல அறக்கட்டளையின் சார்பில், சார்பில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆறுமுகம், மற்றும் குமரேசன் என்ற இளைஞர்கள் இணைந்து, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் பழங்குடியினர் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்திற்க்கும் நேரடியாக சென்று, அங்கு உள்ள குழந்தைகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.அதன்படி இவர்கள் பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் உள்ள திருபாலைவனம், காஞ்சிவாயல், கல்லுகடைமேடு, செஞ்சியம்மன் நகர், உள்ளிட்ட அனைத்து பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருங்கின்றனர். இவர்களுடைய இந்த சேவையை அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் வாழ்த்தி, பாராட்டி வருகின்றனர்.