Sat. Sep 26th, 2020

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர், கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

1 min read
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பில், வல்லூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு கலந்து கொண்டு கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும்
நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்கள் 550 பேருக்கு, கருணைத் தொகையாக ரூபாய் 1000 மற்றும் 5 கிலோ அரிசி, காய்கறிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமும், சலவைத் தொழிலாளர்களுக்கு அயன்பாக்ஸ், கைம்பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு இட்லி குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 120 பேருக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு பயனாளிகளுக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,கிளை கழக செயலாளர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *