Fri. Sep 25th, 2020

பெரியபாளையம் வங்கியில், பெருமளவில் மக்கள் கூட்டம் கூடுவதால்.தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது…

1 min read
தமிழகம் முழுவதும்,
கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கையாக தமிழல அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பேங்க் ஆப் பரோடா வங்கியின் முன்பு தினமும் பல்வேறு தரப்பிலான மக்கள் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவர் மேல் ஒருவர் உரசியபடியே முண்டியடித்து நிற்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும்அபாயம்உருவாகியுள்ளது.
எனவே, ஆப் பரோடா நிர்வாகம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மற்றும் வங்கிக்கு வந்து செல்கின்ற பலதரப்பட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ” நாங்கள் இந்த வங்கியின் மூலம் வரவு, செலவு கணக்கு
வைத்துள்ள ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், நாங்கள் நூறு நாட்கள் வேலை செய்துவருகிறோம். எங்களுக்கு சம்பள பணம் வங்கியில் செலுத்தாமல், வேலை செய்த இடத்தில் கொண்டு வந்து தர வேண்டும். என்றும், இந்த சம்பள பணத்தை நம்பி தான் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். எனவே இதில், எங்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளனர்…

செய்தியாளர்- சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *