மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில், உள்ள குழந்தைகள், மற்றும் மாணவ, மாணவிகளை கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டி, மேலூர் ஊராட்சிமன்ற தலைவர் வாசுகி நிழவழகன், மற்றும் பேஸ் அறக்கட்டளையும் இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்ற தலைவர் வாசுகி நிழவழகன் தலைமை தாங்கினார். மீஞ்சூர் வட்டார முதன்மை மருத்துவ அலுவலர் ராஜேஷ், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டசத்து உணவுகளை வழங்கி கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் இந்னிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உதயசூரியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், கதிரவன், மற்றும் மேலூர் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் ருக்மணி, லட்சுமிபதி, சங்கர், ரேவதி, கோதைநாயகி, அண்ணாதுரை, ஆரோகியமேரி, சாந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்னிகழ்ச்சியை பேஸ் அறக்கட்டளையின் நிர்வாகி சாலமோன் செய்திருந்தார். இறுதியாக, துணை தலைவர் செந்தில், ஊராட்சி செயலாளர் இளஞ்சூரியன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.