செங்குன்றம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடித்த போலிசாருக்கு, சென்னை காவல் ஆணையர் பாராட்டு…
1 min read

காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் பூட்டை உடைத்து கொள்ளையடிப்லது தொடர் சம்பவங்களாக இருந்து வந்தது. அதனால் செங்குன்றம் பகுதி மக்கள் பீதியில் இருந்தனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் போலிசாருக்கும் பெரும் சவாலாகவே இருந்து வந்த நிலையில், புழல் சரக உதவி ஆணையாளர் ராம. ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.

தனிப்படையில் செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஜவஹர் பீட்டர், வசந்தன், உதவி ஆய்வாளர்கள் சரவணன், அசோக், முதல், இரண்டாம் நிலை காவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த தனிபடை போலிசார் இரவு,பகல் பாராமல் மிக தீவரமாக செயல்பட்டு, செங்குன்றம் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் 10 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த கொளையர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், பொருட்களையும் மீட்டனர். அதனால், புழல் சரக உதவி ஆணையாளர் ராம. ஸ்ரீகாந்த் அவர்களையும் அவருடன் மிக சிறப்பாக தனிபடையில் பணியாற்றிய, செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜவகர் பீட்டர் உட்பட அனைவரையும்,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், அவர்கள்
நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
