திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் திர்த்தக்கிரியம் பட்டு ஊராட்சியில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், குப்பைகள், மற்றும் கழிவுகள், அகற்றப்பட்டு ஊராட்சி முழுவதும் அசுத்தம் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருக்கும் வகையில் அமைக்கபட்டுள்ளது. மேலும் சுத்தம் செய்த இடங்களில், அழகிய சுவர் ஓவியங்களை வரைந்து, அதில் நல்ல, நல்ல வாசகங்களின் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் அவர்கள் முன்னிலையில், ஊக்குனர் வேல்விழி மற்றும் வார்டு உறுப்பினர்கள் வேளாங்கண்ணி, சரவணன், கீதா, விஜி, தரணிதரன், சாந்தி, மூர்த்தி ஆகியோர் மக்களுக்கு சுகாராதம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர் நிழல்.இன் – 8939476777