திருவள்ளுர்ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில், மின்கலத்தால் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தை, ஒன்றியகுழு தலைவர் துவக்கி வைத்தார்…
1 min read

திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்கலத்தால் இயங்க கூடிய குப்பைகளை சேகரிக்கும் மூன்று சக்கர வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர் இரா.சுபத்ரா இராஜ்குமார் தலைமையில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெ.ஜெயசீலி ஜெயபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், டி.கே.பூவண்ணன், துணைத்தலைவர் எம்.எஸ்.சிவராம கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் கே.ஆனந்த்பாபு, வி.பிரவீனா வேலுதம்பி, எஸ்.கீதாஞ்சலி சங்கர், எம்.ராஜேஸ்வரி முருகன், எஸ்.சுனில், எச்.பிரசாந்த், க.மகேஸ்வரி கண்ணன், ஆர்.ராகவன், எம்.பானுதேவி முருகன், ஆர்.குமரன், எஸ்.சித்ரா செந்தில். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777