Fri. Sep 25th, 2020

திருவள்ளூர் போலிஸ் சரகதிற்க்கு புதிய துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்று கொண்டார்.

1 min read

திருவள்ளூர் போலிஸ் சரக துணை காவல் கண்காணிப்பாளராக துரைபாண்டியன் பதவியேற்று கொண்டார். அவர் இதற்கு முன்பு வேலூர் மாவட்டம் காட்பாடியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு முன்பாக, திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த கங்காதரன் கடலூர் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். பதவியேற்றுக் கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் செய்தியார்களிடம் கூறுகையில், திருவள்ளூர் சரகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போக்குவரத்தை சீர் செய்யவும், பொதுமக்களுக்கு சேவை செய்யவும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். என, அவர் தெரிவித்தார். பொதுமக்கள் தன்னை எந்த நேரமும் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் எனவும், அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

செய்கிகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *