திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில்,கொரோனா நிவாரணம், மாணவிக்கு கல்வி கட்டண உதவி வழங்கபட்டது…
1 min read

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆணைக்கிணங்க, மாநில நிர்வாகிகள் மேற்பார்வையில்
மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன் வழிகாட்டுதலில், நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில்,
மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்தி
(எ)குப்பன் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாஸ்கர்,
எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ்,
சோழவரம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன்.
மாவட்ட SC ST செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லோகேஷ் ராஜ், மீஞ்சூர் ஒன்றிய நற்பணி இயக்க செயலாளர் வினோத் பொன்னேரி நகர நற்பணி இயக்க செயலாளர்
ரமேஷ் மீஞ்சூர் ஒன்றிய துணை செயலாளர் ஜெயகாந்தன்.
ஆகியோரின் முன்னிலையில் , திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரி சட்டமன்ற தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 100 குடும்பங்களுக்கு தலா 5அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டன.

கொடூர் நற்பணி இயக்க மகளிர் அணியினர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஷண்முகப்ரியன் நன்றி கூறினார்.
செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777