பெரியபாளையம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மின்கம்பத்தில் மோதியதில், ஓட்டுநர் உட்பட தொழிலாளர்கள் 11பேர் காயம் மருத்துவ மனையில் அனுமதி…
1 min read



வடமதுரை கிராமத்தை வேன் கடந்து சென்று கொண்சு இருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி, சாலையில் இருந்து கீழே இறங்கி மின்கம்பத்தில் பலமாக மோதி விபத்திற்குள்ளானது. அதில், 10 பெண் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வேறு வாகனத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777