ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்…
1 min read

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான 144 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த நிலத்தை மீட்க கோரி கிராம மக்கள் இன்று ஊத்துக்கோட்டை பெரியபாளையம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி, வருவாய் ஆய்வாளர் யுகேந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “உரிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, நீங்கள் குறிப்பிடும் இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஆக்கரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அது மீட்கப்படும்” என, கூறி வாக்குறுதி அளித்ததன் பேரில், சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777