செங்குன்றம் பவானிநகரில், சுதந்திர தின விழா, கொடியேற்றி சமூகநல அமைப்பு கல்வெட்டு திறப்பு விழா…
1 min read

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பவானிநகரில், “பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்பு குழு” சார்பாக, புதிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, கல்வெட்டு திறப்பு விழாவுடன் 74வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு குழுத் தலைவர் எஸ்.ஜோசப் தலைமையில் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான பி.என்.கே. கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
பொருளாளர் பி.சேகர், கணக்கு தணிக்கையாளர் ஏ.ஜோசப், கௌரவ ஆலோசகர் எம்.ஜான் அலோசியஸ், துணைத்தலைவர் ஏ.இருதயராஜ், துணைச் செயலாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.மாரியப்பன், என்.வி.வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் கே.ராஜவேலு, ஏ.பிஸ்மில்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

எம்ஆர்வி சூப்பர் மார்க்கெட், வள்ளி மயில் பிரார்ப்பர்ட்டீஸ் உரிமையாளர் கே.ரவிச்சந்திரன் கல்வெட்டைத் திறந்து வைத்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செங்குன்றம் நூலகர் ஜோதி பாபு, குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ. ஜோசப், பொன்தாமரை கண்ணன், ஏ.ஆனந், ஐ.அந்துவான் சத்தியநேசன், எஸ்.ரமேஷ், ஜெ.ஜீலியன், ஏ.முத்துமீரான், எஸ்.சேகர், ஜி.கார்த்திக், எஸ்.சதீஷ், எம்.முருகன், எஸ்.அப்துல் வகாப் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். துணைச் செயலாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் குழந்தைகளான எம்.ஷபீக் அஹ்மத், எம்.முகம்மது பாசில் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு பவானி நகர் நூலகத்திற்கு புத்தக அடுக்கு ரேக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
