Fri. Sep 25th, 2020

புழல் ஒன்றியம் தீர்த்தகிரியம்படு ஊராட்சியில், கண்காணிப்பு கேமராக்கள் பணி துவக்க விழா…

1 min read

தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், 4வது வார்டு, 7வது வார்டு, கோட்டூர், அத்திவாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமரா துவக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அருண்குமார் வரவேற்புரையாற்றினார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தி மூர்த்தி, கீதா விஜி, டி.தரணிதரன், வேளாங்கண்ணி சரவணன், நாகஜோதி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புழல் சரக உதவி ஆணையாளர் ராம.ஸ்ரீகாந்த், செங்குன்றம் காவல் நிலையம் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேமராவை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் ஊக்குநர் என்.வேல்விழி, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெ.முருகன், ஜெ.டேவிட்சன், மூர்த்தி, விஜி, வாசுதேவன், எம்.சரவணன், அப்பு, பாலவாயில் சரவணன், எஸ்.நாகா, ஜி.வினோத், ரூபன், குருசாமி, எழில்மணி, சுரேஷ், வேலாயுதம், கௌதமன், நாகராஜ், அஸ்வின் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் பி.யுகேஸ்குமார் நன்றி கூறினார்.

செய்திகள் – நண்பன அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *