Mon. Sep 28th, 2020

மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை திறப்பு, சிசிடிவி கேமரா துவக்கம் , மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையும்,பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிசிடிவி கேமராவும் திறக்கப்பட்டது.

அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள முக்கிய ஏரிகள் குளக்கரைகளின் மேல் பயனுள்ள 5000 மரச்செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்
ஜி. ரவி. அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், ராஜேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்
ரவி தனது சொந்த செலவில் அத்திப்பட்டு ஊராட்சியில் ஏரிகள் குளங்கள் தூர் வாருதல் மற்றும் சிசிடிவி.கேமரா பொருத்துதல் குளத்தின் நடுவே தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றி சுதந்திர தினமான இன்று அதனை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இதனால் அத்திப்பட்டு கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கியும், நன்றி பாராட்டி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில்ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன்,சங்கீதா அன்பழகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்
ஊராட்சி உதவியாளர் பொற்கொடி முருகானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *