மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில், 74வது சுதந்திர தின விழா…
1 min read

மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில், 74வது சுதந்திர தின விழா, மிக சிறப்பாக கொண்டாடபட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, தேசிய கொடி ஏற்றினார். இவ்விழாவிற்க்கு துணை தலைவர் .எம் .டி .ஜி. கதிர்வேல் முன்னிலை வகித்தார்.

மேலும், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும், வார்டு உறுப்பினர்கள் சந்தியா மூவேந்தன் கோமதிநாயகம், அஸ்வினி தேவதாஸ், துளசி பாய் சுந்தரம், சங்கர், பரிமளா கஜேந்திரன், தீபன் சக்கரவர்த்தி, விஜயாசிவகுமார், நிவேதா பிரகாஷ்,சுமதி , அருண்ஜோதி மற்றும் ஊராட்சி செயலர் பொற்கொடி முருகானந்தம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும். தலைவர் மற்றும் துணைத் தலைவரால் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் மரச்செடிகளை நட்டு சுதந்திர தின விழாவை மிக சிறப்பாக கொண்டாடினர்.
செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777
