Sat. Sep 26th, 2020

அனுப்பம்பட்டு கோயில் திருவிழா, எளிய முறையில் நடந்தது…

1 min read

பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில், உள்ள முத்தாலம்மன் கோயிலின் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பாக ஒரு வாரத்திற்கு நடப்பது வழக்கம். அதிலும் இந்த ஆண்டு அந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென, சென்றாண்டு திருவிழாவின் முடிவில் நடந்த கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் காரணத்தால், கிராம மக்கள் அனைவரும் வேலை வாய்ப்புகள் இன்றி, வாழ்வாதாரம் இழந்த சூழ்நிலையாலும், மேலும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்க விதமாகவும்,
” முத்தாலம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவது இல்லை” என, முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கிராமத்தினர் இந்தாண்டு திருவிழா நடத்தா விட்டாலும், இந்த ஆடி மாதத்தில் ஒரு நாள் சிறப்பு பூஜை செய்வது, என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முத்தாலம்மன் கோயிலில், பொது மக்கள் பொங்கல் வைக்கவும், கூழ் ஊற்றவும் அனுமதி மறுக்கபட்டு, கோயிலின் சார்பில் பொதுவாக முறையில் காலை அபிஷேகமும், மதியம் கூழ் ஊற்றியும், 3 மணியளவில் பொங்கல் வைத்தும், மாலை 6 மணியளவில் தீபாராதனை நிகழ்வுகளும் நடத்தபட்டது. அதில் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவேளியை கடைபிடித்து அம்மனை தரிசிக்க, விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *