கும்மிடிபூண்டி அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை, தலையை 2 கிலோமீட்டர் தொலைவில் வீசிய கொடூரம்…
1 min read

தைலமர தோப்பில், இளம் வயதுடைய ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு, அந்த உடலில் தலை இல்லாமல் முண்டமாகவும், கால்களும் வெட்டபட்டு கிடப்பதாகவும், அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, போலிசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, உடனே கும்முடிபூண்டி போலிசார் பரபரப்படைந்து அந்த இடத்திற்க்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு இறந்து கிடந்தவர், சிகப்பு நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்துள்ளார்.

இந்த கொலை குறித்து போலிசார் விசாரித்ததில், கொலை செய்யபட்ட நபர், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கத்தை சேர்ந்த மாதவன் என்பதும், மாதவன் அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த, அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும்
தெரிய வந்தது. மேலும்,
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்மிடிபூண்டி ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர் உட்பட மூன்று இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொலை வழக்கில் ஒருவராக கைதாகி சிறையிலிருந்த மாதவன் சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த ஆண்டு மூன்று இளைஞர்களும்
கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் மாதவனின் தலை கிடந்தால், இந்த படுகொலை சம்பவம், பழிக்கு பழி வாங்க நடந்திருக்கலாம், என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ரவுடி மாதவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிபூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777
