சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி முதல்நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 74வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
1 min read

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி முதல்நிலை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 74வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்செட்டி .ஜெ. சீனிவாசன் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் சாரதா ரவி, வார்டு உறுப்பினர்கள் கோகுல், கௌதம், பாரதிமகேஷ், ஜானகி மாரியப்பன், செல்வராஜ், சுமதி, உஷாபாஸ்கர், முன்னாள் ஊராட்சி செயலாளர் பாபு, உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சோழவரம் ஒன்றியம் ஆமூர் ஊராட்சியில் 74வது சுதந்திர தின விழா அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையேற்று நடத்தினார். வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆமூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியாஆனந்தன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம பெரியோர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் பள்ளி ஆசிரியர்கள் நன்றி உரை வழங்கினார்கள்.
செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777
