Sat. Sep 26th, 2020

திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டாம் அலகு வளாகத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரிய வகை மரசெடிகள் நடப்பட்டது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டாம் அலகு வளாக முகப்பு பகுதியின் எதிர்புறத்தில், 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மரச் செடிகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் வடச்சென்னை அனல்மின் நிலைய இரண்டாம் அலகின், தலைமை பொறியாளர் அறிவுறுத்தலின்படி, அரிய வகை செடிகளான சரக்கொன்றை, மஞ்சள் பூ, குல்மோஹர், அரசமர மற்றும் ஆலமர செடிகள் கொண்டு வரப்பட்டு முகப்பு முன் பகுதிகளில் நடப்பட்டது. இதனை அனல் மின் நிலைய இரண்டாம் அலகின் பொறியாளர்கள் இறை வழிபாட்டு செய்து பின் நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நிலையத்தின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *