Mon. Sep 28th, 2020

பழவேற்காடு இளைஞர் கூட்டமைப்பு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பாரம்பரியத்தை புதுப்பிக்கும் திருவிழாவை, நடத்தினர்…

1 min read

பழவேற்காடு இளைஞர் கூட்டமைப்பு மற்றும் AARDE பவுண்டேசன் இணைந்து பாரம்பரியத்தை புதுப்பிக்கும் திருவிழாவை, 74 வது சுதந்திர தினத்தில், மாலை 3 மணி அளவில் பழவேற்காடு ஏரிக்கரையோரம் நடத்தினர். இந் நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் முகன் தலைமை தாங்கினார், ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் சங்க தமிழ்நாடு மாநில தலைவர், துரைமகேந்திரன் கலந்து கொண்டு, இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களை வழி நடத்தி விழாவை சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளங்களையும், பெருக்குவதற்காக பழவேற்காடு ஏரிகழி முகங்களில் அலையாத்தி செடிகள் அழிந்து வரும் நிலையில், பாரம்பரியமாக மீனவ கிராமங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க கூடிய அந்த அலையாத்தி செடிகளை இளைஞர்கள் நட்டு வைத்தனர். அதே போல், பழவேற்காடு சுற்றுப்புறங்களில் நிழல் தரும் மரக்கன்றுகளையும் இளைஞர்கள் நட்டு வைத்தனர்.

அதே போல், பாரம்பரியமாக கழிமுகங்களின் கரைகளின் எல்லைகளை அடயாளபடுத்த கூடிய, 18 ம் நூற்றாண்டில் நிறுவிய எல்லை கல்லை இளைஞர்கள் ஏற்கனவே கண்டு எடுத்து வைத்திருந்தனர். அந்த கல்லையும் பெரியவர்களிடம் அது குறித்து விசாரித்து, அவர்கள் குறிப்பிட்ட படி கழிமுக கரைகளில் நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு, சமூக ஆர்வலர்கள். பழவை,ஞானமூர்த்தி, சுமன் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்த பல இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக, லோகேஷ். கூறினார்.

செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *