Fri. Sep 25th, 2020

பொன்னேரி தலுகாவில், கிராமபுற பிள்ளைகள் கல்வி வளர்ச்சிகாக, உழைத்திடும் இளைஞர்கள்…

1 min read

பொன்னேரி பகுதியில் உள்ள வஞ்சிவாக்கம் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து, “கற்கை நன்று” கிராம கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை, 2009-ம் ஆண்டு தொடங்கி, அதன் மூலம், கிராமபுறங்களில் உள்ள பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், மேலும் பல்வேறு காரணங்களால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களால் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது, அதை களையும் பொருட்டும், இந்த அமைப்பின் வாயிலாக, அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறனர்.

மேலும், வருடம் தோறும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், வஞ்சி வாக்கம், மெதூர் , ஆசான புதூர், போன்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் செய்தல், பேரிடர் காலங்களில் உதவுதல் போன்ற பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த அமைப்பானது பூவாமி கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது இலவச இரவு பாடசாலையை தொடங்கியது. அதில்,
வடிவேல், கார்த்திக் , நவீன் குமார், உமா ஷங்கர் , அருண்குமார், கிஷோர்குமார் போன்ற நண்பர்கள் இணைந்து இந்த அமைப்பின் மூலம், பல கல்வி உதவிகளை செய்கின்றனர்.

இலவச இரவு பாடசாலையில் பயின்ற லட்சுமி பிரியா நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். அவரை ஊக்குவிக்கும் விதமாக, கற்கை நன்று அமைப்பின் சார்பாக மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ரூபினி, வெண்ணிலா ஆகிய இருவருக்கும் கைகடிகாரம் பரிசுகளாக வழங்கப்பட்டது.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *