திருவள்ளூர் மாவட்ட அமமுக கட்சி நிவாரண உதவி…
1 min read

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கட்சி சார்பில், பொன்னேரி அருகே உள்ள பிரளயம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அம்மன் குளம் பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா கண்ணதாசன் ஏற்பாட்டில், 5 கிலோ அரிசி காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொன். ராஜா அவர்கள் வழங்கினார். அப்போது கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கண்ணதாசன் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் ஊராட்சி செயலாளர் மகேந்திரன் ,வினோத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.