கும்மிடிப்பூண்டியில், பத்திரிக்கையாளரை தாக்கி சிறைபிடிப்பு, ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி நேரில் சென்று விடுவிப்பு…
1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், சென்ற ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர் அமிர்தம் என்ற தலித் இனத்தைச் சேர்ந்த பெண் ஆவார். இந்த ஊராட்சி இதுவரை பல ஆண்டுகளாக பொது பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட
ஊராட்சியாக இருந்து வந்தது, இந்நிலையில் தற்போது அந்த ஊராட்சி தலித் பெண்களுக்கான ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலின் போது அமிர்தம் என்ற தலித் பெண் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்த நாள் முதற்கொண்டே அவரை ஊராட்சியில் செயல்படவிடாமல் செய்வது, அவரை தலைவர் நாற்காலியில் உட்காரவிடாமல் தடுப்பது, கிராமசபை கூட்டத்தில் அவரை பங்கேற்பதை தடுப்பது, 100 நாட்கள் வேலை செய்வதை அவர் பெயரை ஊராட்சிமன்ற அலுவல சுவரில் கூட எழுதவிடாமல் வைத்திருக்கும் அளவிற்க்கு வன்கொடுமை நடவடிக்கைகளில் ஊராட்சி செயலாளர் சசிகுமார் என்பவரும் துணை தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் என்பவரும், தொடர்ந்து அவரை மிரட்டி வந்துள்ளனர்.

மேலும் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது கூட ஊராட்சித் தலைவர் அமிருதம் அவர்களை இந்த நபர்கள் கொடியேற்றவிடாமல் தடுத்து, ஊராட்சி பொருப்பில் எதிலும் இல்லாத ஒன்றிய கவுன்சிலர் கௌரியின் கணவர் அரிதாஸ் என்பவர் கொடி ஏற்ற வைத்துள்ளனர். அதே போல், இரண்டு தினங்களுக்கு முன் ஆகஸ்ட் 15 ம் தேதி 74 வது சுதந்திர தினத்தன்றும், ஊராட்சிமன்ற தலைவர் அமிர்தம்மாளை அந்த நபர்கள் அரசு பள்ளியில் மட்டும் இல்லாமல் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்திலும் தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுத்தும், மிரட்டி விரட்டியடித்துள்ளனர். இது குறித்து செய்தி சேகரிக்க, புதிய தலைமுறை செய்தியாளர் எழில் ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு சென்று செய்தி சேகரித்து கொண்டிருநத போது, அங்கு வந்த ஊராட்சி செயலாளர் சசிகுமார் எழிலிடம் தகராறு செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த ஊராட்சிமன்ற துணை தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார், “உன்னை இங்கு யார் வரசொன்னது, இது எங்க ஏரியா, நீ வந்து எங்களுக்கு எதிர்ப்பா செய்தி போட படம் பிடிச்சிட்டு போய்ட முடியுமா ” என, கூறி மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும், எழில் கையில் வைத்துருந்த போனை பிடிங்கி கொண்டு, கண்களில் பலமாக தாக்கி, கீழே தள்ளிவிட்டுளார். மேலும் கீழே விழுந்த எழிலை சட்டையை பிடித்து இழுத்து சென்று ஊராட்சிமன்ற அலுவலகத்தின் உள்ளே தள்ளி மூடியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலை எதிர் பார்க்காத எழில், சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்டு, அவர் வைத்திருந்த மற்றொரு போனில், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிகுமார் அவர்களுக்கும், மாவட்ட கண்காணிப்பளர் அரவிந்தன் அவர்களுக்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்க்கு பொன்னேரி ஆர்.டி.ஓ விந்தியா, மற்றும் கும்முடிபூண்டி டி.எஸ்.பி ரமேஷ் ஆகியோரை அனுப்பி வைத்தனர். அவர்கள் உடனே சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று, செய்தியாளர் எழிலை மீட்டனர். மேலும் விஜயகுமார் பிடிங்கி வைத்திருந்த செல்போனையும் வாங்கி எழிலிடம் கொடுத்தனர். பின் கும்முடிபூண்டி போலிசார் விஜயகுமார், சசிகுமார் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து, கும்முடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஆர்.டி.ஓ விந்தியா அவர்கள் மற்றும் கும்முடிபூண்டி ஒன்றிய பெரும் தலைவர் சிவக்குமார் ஒன்றிய ஆணையர் ஆகியோர் ஊராட்சிமன்ற தலைவர் அமிர்தம் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரும், அறம் திரைப்பட இயக்குநருமான கோபிநாயனார் ஆர்.டி.ஓ வை சந்தித்து, ” இந்த ஒன்றியத்தில் இது போன்ற அடக்குமுறை சம்பவங்களும், வன்கொடுமை சம்பவங்களும் அதிக அளவில் நடக்கின்றன. இது ஒரு தொடர் சம்பவமாக நடக்க கூடிய உரிமை பறிப்பு சம்பவம், நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து, இந்த தலித் ஊராட்சிமன்ற தலைவரின் உரிமையை மீட்டு கொடுக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், இந்த அமிர்தம்மாள் அந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தில், தேசிய கொடியேற்ற செய்ய வேண்டும் ” எனவும், மேலும், ” அந்த ஊராட்சி செயலாளரை பதவியை பறிக்க வேண்டும், இந்த தலைவருக்கு உறுதுணையாக ஒரு தலித் பெண்ணை அந்த ஊராட்சிக்கு செயலாளராக நியமிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும், புதிய தலைமுறை செய்தியாளர் எழிலை தாகியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த தாக்குதல் சம்பவத்திற்க்கும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) மாநில தலைவர் சுபாஷ் அவர்கள் கண்டனம் தெரித்தததுடன்,
“பத்திரிக்கையாளர்களுக்கு, பணி பாதுகாப்பையும், உயிர் பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதிபடுத்தும் விதத்தில், பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் விரைவில் இயற்றபட வேண்டும் ” என கூறியுள்ளார்.
G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777