Fri. Sep 25th, 2020

திருவள்ளூர் மாவட்டத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற உரிமை இல்லையா…

1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், சென்ற ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர் அமிர்தம் என்ற தலித் இனத்தைச் சேர்ந்த பெண் ஆவார். இந்த ஊராட்சி இதுவரை பல ஆண்டுகளாக பொது பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட
ஊராட்சியாக இருந்து வந்தது, இந்நிலையில் தற்போது அந்த ஊராட்சி தலித் பெண்களுக்கான ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலின் போது அமிர்தம் என்ற தலித் பெண் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்த நாள் முதற்கொண்டே அவரை ஊராட்சியில் செயல்படவிடாமல் செய்வது, அவரை தலைவர் நாற்காலியில் உட்காரவிடாமல் தடுப்பது, கிராமசபை கூட்டத்தில் அவரை பங்கேற்பதை தடுப்பது, 100 நாட்கள் வேலை செய்வதை அவர் பெயரை ஊராட்சிமன்ற அலுவல சுவரில் கூட எழுதவிடாமல் வைத்திருக்கும் அளவிற்க்கு வன்கொடுமை நடவடிக்கைகளில் ஊராட்சி செயலாளர் சசிகுமார் என்பவரும் துணை தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் என்பவரும், தொடர்ந்து அவரை மிரட்டி வந்துள்ளனர்.
மேலும் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது கூட ஊராட்சித் தலைவர் அமிருதம் அவர்களை இந்த நபர்கள் கொடியேற்றவிடாமல் தடுத்து, ஊராட்சி பொருப்பில் எதிலும் இல்லாத ஒன்றிய கவுன்சிலர் கௌரியின் கணவர் அரிதாஸ் என்பவர் கொடி ஏற்ற வைத்துள்ளனர்.
இந்தசம்பவங்கள் குறித்து, ஊராட்சி தலைவர் அமிர்தம் ஒன்றிய ஆணையரிடம் புகார் அளித்தும் இதுநாள் வரையில் யார் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளுர் மாவட்ட செயலாளர் வழகறிஞர் சூர்யா, கும்முடிபூண்டி ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், ஆத்துபாக்கம் ஊராட்சியில், ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தில் அந்த ஊராட்சியில் தலித் இனத்தை சேர்ந்த அமிர்தம் அவர்களை சில ஆதிக்க புத்தி கொண்டவர்கள் தேசிய கொடியை ஏற்றவிடாமல் அவர் உரிமையை பறித்தது மட்டும் அல்லாமல் ஊராட்சி நிர்வாதில் எந்த பொறுப்பும் இல்லாத ஒரு நபரை கொடியேற்ற வைத்துள்ளனர். ஆகவே அதிகாரிகள் இந்த விசயத்தில் தலையிட்டு, வருகின்ற சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்றாவது தலித் இன ஊராட்சிமன்ற தலைவரான அமிர்தம் அவர்கள் கொடியேற்ற வழி வகை செய்யும்மாறு, அந்த மனுவில் கூறியிருதார்.

அதே போல் கும்முடிபூண்டி சரக துணை கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்களிடமும், மனு வழங்கியுள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ஒரு மனுவை வழக்கறிஞர் சூர்யா, அனுப்பி வைத்துள்ளார். ஆனால், வருவாய் துறை அதிகாரிகளும், போலிஸ் தரப்பிலும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், ஒரு தலித் பெண் ஊராட்சிமன்ற தலைவரின் உரிமையை தட்டிபறிக்கும் சம்பவம் அறங்கேறியுள்ளது. எனவும், கும்முடிபூண்டி ஒன்றியத்திற்க்கு, இது போன்ற தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை தட்டி பறிக்கும் சம்பவம் ஒன்றும் புதியதல்ல, இது தொடர்ந்து நடக்கும் சம்பவம் தான். இதற்க்கு முன்பு பால ஆண்டுகளாக ஏ.என்.குப்பத்தில் இது போல சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது, இதுவும் அதன் தொடர்ச்சி தான், என வழக்கறிஞர் சூர்யா கூறினார்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *