திருவள்ளூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வரகூடிய, திருவள்ளுர் அரசு மருத்துவமனையில், தினந்தோறும் திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர், திருவலாங்காடு, ஈக்காடு, மணவாளநகர், காக்களூர், ஆகிய பல்வேறு பகுதிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு உள்ளிருப்பு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கொரோனா நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாடகளாக ஆபத்தான நிலையில் பல அடி உள்ள இரண்டு கிணறுகள் திறந்தவெளியில் போதிய தடுப்புவேலிகள் ஏதும் இல்லாமல் உள்ளது.
இந்த கிணற்றில் குப்பை – மற்றும் கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், என அனைத்தும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களும் அந்த வழியாக செல்லும் நோயாளிகளுக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள கிணறில் இருந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பை கழிவுகளும் கிடப்பதால் டெங்கு, மலேரியா, பல்வேறு நோய்கள் ஏற்படுமோ என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள இரண்டு கிணறுகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. கிணற்றில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குழந்தைகள் அடிக்கடி இக்கிணற்றை எட்டிப் பார்த்துச் செல்கின்றனர். அவர்கள் தவறிவிழவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அந்த கிணறுகளுக்கு தடுப்புவேலி அமைக்கவும், அதை மழைநீர் சேகரிக்க வாய்ப்பு இருந்தால், மழைநீர் சேகரிப்பாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர் – மகேஷ் நிழல்.இன் – 8939476777