பொன்னேரி அருகே, மண் குவாரி நடத்த மக்கள் எதிர்ப்பு…
1 min read

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில், உள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான 224 ஏக்கர் பரப்பிலான ஏரியில் குவாரி நடத்த போகிறாம், என கூறிக்கொண்டு சிலர் ஏரியை ஜேசிபி இயந்திரம் மூலமாக சுத்தம் செய்த போது, பொது மக்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவாயல் ஊராட்சி தலைவர் அற்புதராணி சதீஷ்குமார், எஸ்.ராஜேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுவாயல் ஆரணி சாலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த கவரப்பேட்டை போலீஸார், ஆர்ப்பாட்டம் செய்த

பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது பொதுமக்கள் போலீஸாரிடம், “ஏற்கெனவே இந்த ஏரியில் 2 முறை குவாரி செயல்பட்டு, அதனால் ஏரியில் எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் உருவாகிய நிலையில் மீண்டும் குவாரி செயல்பட்டால், நீர் வளம் அழிந்துவிடும் என்றனர். மேலும் ஏரி உள்ள பகுதியில் 85 ஏக்கர் பரப்பில் அரசின் சக்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ள நிலையில் இந்த குவாரி நடத்தினால், சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கிய இடத்திலும் மணல் கொள்ளை நடைபெறும், அத்துடன் புதுவாயல் ஊராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக போடப்பட்ட இரு ஆழ்துளை கிணறுகள் ஏரிக்கரையோரம் உள்ள நிலையில் இங்கு குவாரி செயல்பட்டால், நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படும்” என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து குவாரி அமைக்க பணிகள் செய்ய வந்த ஜேசிபி இயந்திரங்களை போலீஸார் திருப்பி அனுப்பினர்.
இந்த ஏரியில் , குவாரி செயல்பட்டால் ஊராட்சி மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம், என எச்சரித்துவிட்டு, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் – சீனிவசன்
நிழல்.இன் – 8939476777
