வெங்கல் அருகே, தாழ்வான மின்கம்பியில் சிக்கிய பெண் உயிரிழப்பு.
1 min read

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே,
மாகரல் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி, இவர் ஏழ்மை நிலையில், இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு உள்ளவர் என்பதால், தமிழக அரசு சார்பில், விலையில்லா ஆடுகள் ரேவதிக்கு வழங்கப்பட்டது. ரேவதி தினமும் வயல்வெளிகளுக்கு அருகே அந்த ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பார். வழக்கம் போல் இன்றும் அவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, தாழ்வாக சென்ற மின்கம்பியை ரேவதி கவனிக்காமல் அதன் அருகே சென்ற போது, தாழ்வாக சென்ற மின் கம்பியில் சிக்கிய ரேவதி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசார் ரேவதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளைநிலங்களிலும், சாலையோரங்களிலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். ஆடு மேய்க்க சென்ற பெண் ஒருவர் தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் கடந்த மாதம், இதே வெங்கல் போலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஆயிலச்சேரியில், அஜீத் என்ற கூலி தொழிலாளி தாழ்வாக சென்று அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிர் இழந்தார். இந்த பகுதியில் உள்ள மின்வாரிய துறையினரின் அலட்சியம் தான், இது போன்ற அப்பவி மக்களின் உயிர் இழப்புகளுக்கு காரணம். அலட்சியமாக இருக்கும், இப்பகுதி மின்வாரிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…
செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777