செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி சார்பில், காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா…
1 min read


செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி சார்பில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் இலவச மருத்துவமனையை மார்க்கெட் அருகே நடத்தி வருகின்றனர். அதன் ஓர் சேவையாக காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா சங்கத் தலைவர் ஜெ.பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பி.ராஜேஷ் வரவேற்புரையாற்றினார். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஆலோசகர்கள் பி.கணேசன், ஆர்.செல்வக்குமார், துணைத்தலைவர்கள் ஏபிஆர். செல்வம், டி.சதீஷ்குமார், துணைச் செயலாளர்கள் வி.பொன்னுவேல், ஜெ.ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சரும் அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான
ம.ஃபா. க.பாண்டியராஜன் ஸ்கேன் மையத்தை துவக்கி வைக்க, முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான வி.மூர்த்தி குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினர்.
பி.ராஜா, கே.தங்கவடிவேல், ஆர்.சேகர், பி.காமாட்சிராஜன், என்.ராஜ்குமார், ஆர்.ஆனந்த சீனிவாசன், எம்.சேர்மராஜஒ.!ன், ஜெ.பிரபாகரன், வி.ரத்னகுமார், ஆர்.எஸ். கந்தசாமி (எ) குரு ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். இதில் ரெட்ஹில்ஸ் வட்டார ஐக்கிய நாடார் சங்கத் தலைவர் ஏ.தேவராஜ் நாடார், செயலாளர் பி.கணேசன், பொருளாளர் என்.கணேசன், அதிமுக நிர்வாகிகள் ஜி.கே. எழில், செங்குன்றம் பேரூர் கழகச் செயலாளர் எம்.ஆர்.தாராசிங், டி.ரமேஷ்,டாக்டர் ஆர்.முனுசாமி, எஸ்.எம்.ரமேஷ், ஆர்.ஜாகீர் உசேன், வழக்கறிஞர் துரை டி.ரமேஷ், செங்குன்றம் லயன்ஸ் சங்கம் இரா.ஏ.பாபு, என்.சந்திரசேகர், சங்கத் தலைவர் பொன்னையன், செயலாளர் டி.பவானிசங்கர், பொருளாளர் கே.பாஸ்கர் மற்றும் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும், அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்கு உறுதுணையாக இருந்த புரவலர்களை அழைத்து மரியாதை செய்து விருது வழங்கப்பட்டது.
செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
