Sat. Sep 26th, 2020

திருவள்ளூர் அருகே,1 கோடி கேட்டு குழந்தையை கடத்திய உறவினர் கைது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர், பாபு என்கிற முபாரக். இவர் சோளிங்கரில் கோழிகறி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சோபியா. இவர்களுக்கு பர்வேஸ்(9),ரிஷ்வந்த் (6)அசாருதீன் (3) ஆகிய மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அசாருதீன் திடீரென காணாமல் போனான். அதனால் பதறி போன முபாரக் குடும்பத்தினர் குழந்தையை ஊர் முழுக்க தேட துவங்கினர். இதற்கிடையே, சிறிது நேரத்தில் முபாரக் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது, அதில் பேசிய மர்ம நபர் ஒருவர்,”குழந்தையை நான் கடத்தி இருக்கிறேன் என்றும், குழந்தையை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமானால், ஒரு கோடி ரூபாயை தயார் செய்யுமாறும் ” மிரட்டி இருக்கிறான். இதனால், செய்வதறியாது பதறிபோன குழந்தையின் பெற்றோர், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

உடனே, ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் உடனடியாக, போலீசாரை உஷார் படுத்தினார். திருத்தணி டிஎஸ்பி குணசேகரனுக்கும் தகவல் தெரிவிட்டு, மின்னல் வேகத்தில் போலீஸார் ஆர்.கே.பேட்டையை சுற்றி வளையம் அமைத்தது போல் விரைந்து செயல்பட துவங்கினர். மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்தும் தேடுதல் வேட்டை நடந்துக் கொண்டிருக்க, சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்பட்ட போலிசாரின் இந்த தீவிர செயல்பாடுகளால், தாம் ஆர்.கே.பேட்டை எல்லையை விட்டு வெளியேற முடியாது என்பதை உணர்ந்து கொண்டதால், குழந்தையை கடத்தி வைத்திருந்த மர்ம நபர் அச்சத்தில் கடத்தப்பட்ட குழந்தையை ஆர்கே பேட்டை அருகே வங்கனூர் கூட்டு சாலையில் விட்டு,விட்டு ஓடிபோய் விட்டான்.

அந்த இடத்தில் குழந்தை தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். விசாரணையில், குழந்தையை கடத்தியவர் முபாரக்கின் உறவினர் சுலைமான் என்பது தெரியவந்தது. உடனே, சுலைமானை கைது செய்த போலிசார் தீவிர விசாரனை நடத்தியதில், “சுலைமான் முபாரக்கின் உறவினர் தான் என்றும், முபாரக் போலவே தானும், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இஸ்லாம் நகரில் கறி கடை நடத்தி வந்ததாகவும். சமீப காலமாக தொழிலில் பெருத்த நட்டம் ஏற்ப்பட்டதால், தற்போது, தனக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதாகவும், அதற்காக முபாரகிடம் கடனாக கேட்டால், தரமாட்டார் என்பதால், அவர் குழந்தையை கடத்தி பணம் பறிக்க நினைத்ததாவும்,” சுலைமான் போலிசாரிடம் தெரிவித்தார், இதற்க்கிடையே, இரண்டு மணி நேரத்தில் குழந்தையை போலிசார் மீட்டதால், போலிசாருக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *