January 20, 2021

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவு பிரட்சனை, கமல் ஆய்வு குழு அமைப்பு…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில், செயல்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வரகூடிய கழிவான நிலக்கரி சாம்பலை தண்ணீரில் கரைத்து, அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில், செப்பாக்கம் கிராம பகுதியில் சுமார் 1200 ஏக்கர் நிலப்பரப்பில், செயற்க்கையாக அமைக்கபட்ட குளங்களில் நிரப்பி, பின்னர் பல மாதங்கள் கழித்து தண்ணீர் வற்றிய பிறகு லாரிகள் மூலம் அந்த சாம்பல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த குளங்களில் இருந்து பறக்கும் சாம்பல் கழிவுகளால் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும்பாலுமான குடும்பங்கள் ஏற்கனவே கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து போய்விட்டனர். சாம்பல் கழிவுகளை குளத்திற்கு கொண்டு செல்லும் ராட்சத பைப்பில் உடைப்பு ஏற்பட்டு, அந்த சாம்பல் கலந்த சுடுநீர் வெள்ளம் போல் செப்பாக்கம் கிராமத்தை சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4நாட்களுக்கு முன்பு முற்றிலுமாக கிராமத்தை சாம்பல் கழிவு நீர் சூழ்ந்ததாகவும், அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீதம் உள்ள மக்களும் கிராமத்தை விட்டு வெளியேறிவதாக கூறி புறப்பட்டனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அனல்மின் நிலைய அதிகாரிகள் பாலசுப்பிரமணியம், வெங்கடேஷ், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாம்பல் கழிவு நீரில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், ” சாம்பல் கழிவு நீர் சூழ்ந்திருப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் பருக முடியாத நிலையில் உள்ளது எனவும், சாம்பல் துகள்களால் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், உடல் அரிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், பல ஆண்டுகளாக புகார் தெரிவித்தும், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனால் தான் நாங்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை ” என்று மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அவர்களுக்கு பதில் அளித்த அனல் மின்நிலைய அதிகாரிகள்,
” இன்னும் 10நாட்களில் சாம்பல் கழிவுகளை குளத்திற்கு கொண்டு செல்லும் ராட்சத பைப்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு கிராமத்தில் இருந்து சாம்பல் கழிவுகளையும் அப்புறப்படுத்தி தருகிறோம் ” என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, கிராமத்தை விட்டு வெளியேறும் திட்டத்தை கைவிட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

இது குறித்து, கட்டுபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு பிறகு, எங்கள் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி அவர்கள் வட சென்னை அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் தட்சனா மூர்த்தி அவர்களை சம்பவ இடத்திற்க்கு நேரில் அழைத்து வந்து பார்க்க செய்தார். அப்போது, அவர் ” சாம்பல் தண்ணீர் செல்லும் குழாய்கள் புதுபிக்கும் பணிகள் துவங்கபட உள்ளது. அப்பணிகள் சில தினங்களில் நிறைவடைந்துவிடும். இனி இது போல் பிரட்சனைகள் வராமல், நிர்வாகம் கவனித்து கொள்ளும் ” என உறுதியளித்தார். இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மனு ஒன்றும் அளிக்கபட்டுள்ளது. என கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே, இந்த சாம்பல் கழிவால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு பிரட்சனை குறித்து, அவர் ஒரு முறை நேரில் வந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆனால் அப்போது சாம்பல் காற்றில் பறந்து வந்த சூழ்நிலை மாறி, இப்போது ஊரின் உள் சாம்பல் சுடுநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவது குறித்து, கமலஹாசன் அவர்கள் தரப்பில் நாம் பேசிய போது, ” இது குறித்து தலைவருக்கு, அப்பகுதி எங்கள் நிர்வாகிகளும் தகவல் கொடுத்து உள்ளனர். அவரும், ” சாம்பல் கழிவால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பிரட்சனைகள் தீந்தபாடில்லாமல் மாறாக, அதிகம் ஆவதை கூறி வருத்தபட்டார். மேலும், அந்த சுற்றுசூழல் பிரட்சனை குறித்து ஆய்வு செய்ய, உண்மை அறியும் குழு ஒன்றையும் அமைத்துள்ளார்” என கூறினர்.


G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *