Fri. Sep 25th, 2020

உள்ளாட்சி பிரதிநிதிகளை புறக்கணிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்க்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர், எச்சரிக்கை…

1 min read

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி கி.வேணு – ஆவடி சா.மு.நாசர் ஆலோசனை படி, திமுக உள்ளாட்சி பிரதி நிதிகள் சந்தித்து பேசினர். அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கூறுகையில், ” உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த நானும், துணை தலைவராக டி.தேசிங்கும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதேபோல், மாவட்டம் முழுவதும், திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக, 13 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு சார்பில், மாவட்ட நிர்வாக அளவில் நடத்தபட கூடிய மகளிர் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் என எந்த அரசு விழாக்களுக்கும், மாவட்ட அளவில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம்களுக்கும், மாவட்ட ஆட்சியர் சார்பிலோ, மாவட்ட நிர்வாகம் சார்பிலோ, திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளான எங்களுக்கு அழைப்பிதழோ, தகவலோ தெரிவிக்காமல் நடத்தபடுகிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளான தங்களை அவமதிக்கும் செயலாகும், ” என குற்றம்சாட்டிபேசினார்.

அது மட்டுமில்லாமல், செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மத்திய அரசு, உள்ளாட்சி நிர்வாகத்திற்க்கு 2019-20ம் ஆண்டுக்கான நிதியை, 14ம் நிதி ஆணைக் குழு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை உள்ளாட்சி மன்றங்கள் மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் அதிமுக அரசும், திருவள்ளுர் மாவட்ட நிர்வாகமும் பேக்கேஜ் டெண்டர்கள் மூலம் பணிகளை செயல்படுத்துவதற்கு முயன்ற நிலையில், அதற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதே போல் ஊரக சாலை மேம்பாட்டிற்கு 2019-20 ஆம் ஆண்டிற்கு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், ஆலோசனைகள் பெற்று டெண்டர் விடப்படும். ஆனால் அதிமுக அரசும், மாவட்ட நிர்வாகமும் அதிலும் குலறுபடிகள் செய்து, கொள்ளயடிக்க துடிக்கின்றன. இந்த செயல்கள் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அதிகாரங்களை பறிக்கும் செயலாகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் ” என்றார். மேலும், “இதே நிலை நீடித்தால், நாங்கள் நீதி மன்றம் சென்று, எங்கள் உரிமைகளை மீட்டெடுப்போம் ” என, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, மாவட்ட துணை பெருந்தலைவர் கொத்தியபாக்கம் டி.தேசிங்கு, மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, பூவிருந்தவல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், வில்லிவாக்கம் ஒன்றிய குழு தலைவர் கிரிஜா, திருவள்ளூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், புழல் ஒன்றியம் பெருந்தலைவர் தங்கமணி திருமால், சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் மாலதி குணசேகரன், மீ.வே.கருணாகரன், சுஜாதா மகாலிங்கம், சரஸ்வதி ரமேஷ், மகாலட்சுமி மோதிலால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்,திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தலைவர்கள் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மகேஷ்

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *