செங்குன்றம் பவானிநகரில், கண்காணிப்பு கேமரா துவக்க விழா…
1 min read

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பவானிநகரில்
” பவானிநகர் சுற்றுவட்டார சமூக நல பாதுகாப்பு குழு ” சார்பாக, 51 சிசிடிவி கேமராக்கள் துவக்க விழா அரசு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியோடு நடைபெற்றது. குழுத் தலைவர் எஸ்.ஜோசப் தலைமையில் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான பி.என்.கே. கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
பொருளாளர் பி.சேகர், கணக்கு தணிக்கையாளர் ஏ.ஜோசப், துணைத்தலைவர் ஏ.இருதயராஜ், துணைச் செயலாளர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ ஆலோசகர்கள் இ.மாரியப்பன், டாக்டர் என்.வி.வெங்கடேசன், எம்.ஜான் அலோசியஸ், வார்டு உறுப்பினர்கள் கே.ராஜவேலு, ஏ.பிஸ்மில்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சென்னை பெருநகர காவல் மாதவரம் மாவட்டம் காவல் துணை ஆணையாளர் டாக்டர் கே.பாலகிருஷ்ணன் சிசிடிவி கேமராவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
புழல் சரக காவல் உதவி ஆணையாளர் ஆர்.ஸ்ரீகாந்த் கல்வெட்டைத் திறந்து வைத்தார். செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் டி.வசந்தன், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் திருவள்ளுவர், அன்னை தெரசா, டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம் ஆகியோர் படங்களை திறந்து வைத்தனர்.

பாடியநல்லூர் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர் என்.ஜெயலட்சுமி நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் கீதா அரசு, 18வது ஒன்றிய கவுன்சிலர் கா.மகேந்திரன், தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் டி.கவிதா டேவிட்சன், புள்ளிலைன் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சரண்யா ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பாடியநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏ.முத்துக்கண்ணன், என்.வேலு, பிரியதர்ஷினி சரவணன், ராணி மோகன், பி.சுரேஷ், டி.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ. ஜோசப், பொன்தாமரை கண்ணன், எம்.ஏ.முத்துமீரான், எஸ்.சேகர் (அம்மன்), ஏ.ஆனந், ஐ.அந்துவான் சத்தியநேசன், ஜெ.ஜீலியன், எம்.ஜி.கார்த்திக், எஸ்.சதீஷ், எஸ்.ரமேஷ், எம்.முருகன், எஸ்.அப்துல் வகாப் மற்றும் நன்கொடை வழங்கியவர்கள், பொதுமக்கள் குழந்தைகள் சமூக இடைவெளியோடு திரளாக கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் மாதவரம் மாவட்டம் காவல் துணை ஆணையாளர் டாக்டர் கே.பாலகிருஷ்ணன், சமூக பணிக்குழு சார்பாக, நாட்டு மரங்களை நடுவதற்கு மரங்களை வழங்கினார்.

செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
