Fri. Sep 25th, 2020

பொன்னேரியில், எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மக்கள் விரோத நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்க்கு பொன்னேரி தொகுதி தலைவர் ஹபீப் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரத்தினம் கண்டன உரை நிகழ்த்தினார். கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில், மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்து விட்டு, மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஏழை மருத்துவ மாணவர்களின் கனவை தகர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ராஜாஜியால் கொண்டு வர முயற்சி செய்யப்பட்ட குலகல்வி திட்டத்திற்க்கு சமமான, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், என கேட்டுக் கொண்டனர். ஆரிய பார்ப்பன சித்தாந்த கொள்கைகளுடன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையால் வருங்கால தலைமுறை கல்வி பயில முடியாத சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவித்தனர். மேலும் சுற்றுச்சூழலை அழித்து கார்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொண்டு வரப்படவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை கைவிட வேண்டும், எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மேலும் கிரிமனல் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஆபத்தான திருத்தத்தை கைவிட வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டனர்.

நிழல்.இன் –
8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *